Avoid Junk foods – குழந்தைகள் துரித உணவுகளை தவிர்க்கவும்
குழந்தைகள் துரித உணவுகளை சாப்பிடுவதால் என்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை பார்க்கலாம்.
துரித உணவு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும்; சில சிக்கல்கள் ஆரம்பத்திலும் மற்றவை பின்னரும் தோன்றக்கூடும்.

இந்த உணவுகளில் பெரும்பாலும் அதிகப்படியான கார்போ ஹைட்ரேட் மற்றும் மோசமான கொழுப்பு சத்தும் உள்ளடங்கி இருக்கும். மேலும் அவற்றில் சர்க்கரை, உப்பு அதிகமாகவும் குழந்தை வளர்ச்சிக்கு தேவையான புரதங்கள் குறைவாகவும் இருக்கும்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் துரித உணவுகளில் காணப்படுவதில்லை. இந்த ஊட்டச்சத்து சமநிலையற்ற உணவுகளை நம் குழந்தைகள் அடிக்கடி உண்பதால் விரைவான எடை அதிகரிப்பு, உடல்பருமன் (OBESITY) உண்டாகும்.
விரைவில் குந்தைகளுக்கு நீரிழிவு நோய் (Diabetes), இதய நோய் (cardiovascular disease), மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களும் வரக்கூடும். மேலும், துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் சில உணவு சேர்க்கைகள் புற்று நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. காஃபின் கலந்த (கோலா, பெப்சி, சோடா) போன்ற பானங்களை தொடர்ந்து அதிகமாக உட்கொள்வது குழந்தைகளுக்கு பதட்டம் மற்றும் தூக்க தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்.
எனவே குழந்தைகளுக்கு துரித உணவுகளுக்கு மாறாக, ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே நாம் செய்து தருவது மிகவும் முக்கியம். பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு வரும் பிள்ளைகளுக்கு நாம் வேகவைத்த சுண்டல், பயறு வகைகள், கடலை உருண்டை, சத்துமாவு கஞ்சி, உருளைக்கிழங்கு கட்லட் , கேழ்வரகு மால்ட், பொறி உருண்டை, பாலில் ஊற வைத்த அவல், பழ சாலட் (Salad) போன்றவற்றை தரலாம்.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு வழிகாட்டி.
எனவே நாமும் துரித உணவுகளை தவிர்த்து
ஆரோக்கியமான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
An article from Daily Thanthi, dated: 17 Jan 2023 by Dr. Abinaya Mathankumar.
dr.aisparth